சென்னை: தமிழ்நாடு அரசு வழக்கமாக பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்தை பொங்கல் பரிசு தொகையாக வழங்குகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டிலும் பொங்கல் பரிசு தொகை தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஏற்கனவே அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகள் இந்த பொங்கலுக்கு உரிமை தொகை மட்டும் இல்லாமல் பொங்கல் பரிசு தொகையான 1000 ரூபாயையும் சேர்த்து 2000 ரூபாயை பெறுவதற்கான வாய்ப்பை பெற உள்ளார்கள்.
பொதுவாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு பல பெண்களும் தங்களுடைய பொங்கல் பரிசு தொகையோடு சேர்ந்து மகளிர் உரிமை தொகையாகவும் மொத்தம் 2000 ரூபாயை பெற்றனர். அந்த வகையில் நடப்பாண்டிலும் அதே வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது 15ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டது.