Offline

LATEST NEWS

சின்னத்திரை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் கவுதமி!
Published on 11/16/2024 02:12
Entertainment

ரஜினி- பிரபு இணைந்து நடித்த குரு சிஷ்யன் என்ற படத்தில் தமிழுக்கு வந்தவர் தெலுங்கு நடிகை கவுதமி. அதன் பிறகு தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வந்தவர் திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றார். அதன்பிறகு 2005 முதல் 2016 ஆம் ஆண்டு வரை கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்தவர், அவருடன் இணைந்து பாபநாசம் படத்திலும் நடித்திருந்தார்.

அதன்பிறகு தெலுங்கு, மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த கவுதமி தற்போது சின்னத்திரை சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ என்ற தொடரில் கவுதமி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் நடித்துள்ள காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Comments