ஷா ஆலம்:
சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு நிதி உதவியாக (BKK) இரண்டு மாத சம்பளம், கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் தெரிவித்துள்ளார்.
இன்று சிலாங்கூர் மாநிலத்தின் 2025க்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று தாக்கல் செய்யும் போது, இதனை அறிவித்தார்.
இது சிலாங்கூரின் வளர்ச்சிக்கான மாநில அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளுக்கு கிடைத்த ஒரு அங்கிகாரமாகும் என்று அவர் சொன்னார்.
மேலும் சிலாங்கூர் மாநில அரசு 20 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான கடனை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது என்று அவர் சொன்னார்.
கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த போது வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி, கடன் முழுமையாக செலுத்தப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.