ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அலோர் காஜாவில் கவனகுறைவாக லோரியை ஓட்டி விபத்தினை ஏற்படுத்தியதன் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட, லோரி ஓட்டுநருக்கு 16,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
டி.குமரேசன் (30) என்பவருக்கு மாஜிஸ்திரேட் நூருல் பாஹியா கமாலுதீன் வியாழக்கிழமை (நவ. 21) அபராதம் விதித்து, அவரது ஓட்டுநர் உரிமத்தை தடை செய்யும் தண்டனையுடன் உறுதிப்படுத்தி உத்தரவிட்டார்.
குமரேசன் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதன் விளைவாக Ng Kwang Shiang 34, Ng Hui Bee 27, மற்றும் அவர்களது ஏழு வயது மகள் ஆகியோர் நவம்பர் 18, 2019 அன்று அதிகாலை 12.09 மணியளவில் அலோர் காஜாவில் உள்ள ஜாலான் கோலத்தில் உயிரிழந்தனர்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 43(1)ன் கீழ் இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இது RM5,000 முதல் RM10,000 வரையிலான அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனையுடன், ஓட்டுநர் உரிமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.