Offline

LATEST NEWS

காதலை பற்றி மேடையில் போட்டுடைத்த ராஷ்மிகா! வெளிப்படையாக சொன்ன விஷயம்
Published on 11/28/2024 01:31
Entertainment

நடிகை ராஷ்மிகா தற்போது  புஷ்பா 2 படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 ரிலீஸ் ஆகும் நிலையில் இன்று சென்னையில் பிரம்மாண்டமாக படத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேடையில் பேசிய ராஷ்மிகாவிடம் பல கேள்விகளை தொகுப்பாளராக இருந்த அஞ்சனா மற்றும் மிர்ச்சி விஜய் ஆகியோர் கேட்டனர்.

காதல்.. எல்லோருக்கும் தெரிந்தது தான்

காதலை பற்றி பல கேள்விகளை கேட்ட நிலையில் ராஷ்மிகா அதை மழுப்பலாக பேசி சமாளித்தார் ராஷ்மிகா.

உங்களுக்கு கணவராக வர போகிறவர் சினிமா துறையை சேர்ந்தவரா அல்லது வேறு துறையை சேர்ந்தவரா என கேட்டபோது.. 'எல்லாருக்கும் தெரிந்தது தான்' என கூறினார் ராஷ்மிகா.

இதனால் அவர் விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதை மேடையில் மறைமுகமாக போட்டுடைத்து இருக்கிறார். 

Comments