Offline

LATEST NEWS

ரிலீஸுக்கு முன்பே பல கோடி வசூல் வேட்டையில் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2
Published on 11/28/2024 01:44
Entertainment

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் படு மாஸாக தயாராகி வருகிறது புஷ்பா 2.

முதல் பாக பிரம்மாண்ட வெற்றியை பெற்றதால் ரசிகர்களும் 2ம் பாகத்திற்காக ஆவலாக வெயிட்டிங். கடந்த 2021ம் ஆண்டு புஷ்பா வெளியானது, மாஸான கமர்ஷியல் படமாக உருவாகியிருந்த இப்படம் கொஞ்சம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

முதல் பாகத்தை  விட 2ம் பாகம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என சொல்லப்படுகின்றன.

வியாபாரம்

அண்மையில் புஷ்பா 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் வியாபாரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. புஷ்பா 2 படத்தின் திரையரங்க உரிமை மட்டும் ரூ. 600 கோடிக்கு விலைபோனதாம். டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் மட்டும் ரூ. 250 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

ரிலீஸ் முந்தைய வியாபாரத்திலேயே இப்படம நல்ல வசூலிப்பதால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Comments