Offline

LATEST NEWS

வேறுபாடுகளை நிறுத்த வேண்டும்.. நடிகை தமன்னா வேதனை
Published on 11/28/2024 01:47
Entertainment

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா.

இவர் தமிழில் அயன், பையா, வீரம், சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.

20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, இன்றும் பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர், 'சிக்கந்தர் கா முக்தார்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் 29 - ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

வேதனை 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் வட மற்றும் தென் இந்திய சினிமாவில் இருக்கும் வேறுபாடுகள் குறித்து தமன்னா பேசியுள்ளார். அதில், " எங்கள் சொந்த துறையில் இது போன்று வேறுபாடுகள் உருவாக்குவதை நிறுத்த வேண்டிய நேரம் இது.

இது போன்ற கருத்துக்கள் சினிமாவை மேலும் அழிக்க தான் செய்கிறது. வட இந்திய சினிமாவும் தென்னிந்திய சினிமாவும் ஒன்றிணைந்து ஒரு உண்மையான பான்-இந்தியா படத்தை உருவாக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.  

Comments