Offline

LATEST NEWS

ஆர்.ஜே. பாலாஜியின் நடிப்பில் சொர்க்க வாசல் படத்தின் மிரட்டலான ட்ரைலர்..
Published on 11/28/2024 01:49
Entertainment

ஆர்.ஜே. பாலாஜியின் நடிப்பில் சொர்க்க வாசல் படத்தின் மிரட்டலான ட்ரைலர்..

சொர்க்க வாசல்

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் சொர்க்க வாசல். அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், சானியா அய்யப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

90களில் மெட்ராஸ் சிறைச்சாலையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் என்பவர் இசையமைத்துள்ளார்.

சொர்க்க வாசல் ட்ரைலர்

இப்படத்தின் First லுக் வெளிவந்த நாள் முதல், படத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. தொடர்ந்து டீசர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சொர்க்க வாசல் படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.

அனிருத், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து சொர்க்க வாசல் படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர். இதோ சொர்க்க வாசல் படத்தின் மிரட்டலான ட்ரைலர்.

Comments