Offline

LATEST NEWS

மனமுடைந்து போனேன், ஏ ஆர் ரகுமான் மகன் உருக்கம்
Published on 11/28/2024 01:57
Entertainment

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவி சாயிராவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆனார்கள்.

29 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அவர்கள் திடீரென இப்போது இந்த முடிவு எடுத்து ஏன் என ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.

மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து அறிவித்த சில மணி நேரத்திற்கு பிறகு அவரது குழுவில் bassist ஆக இருக்கும் மோகினி டே என்பவரும் கணவரை பிரிவதாக அறிவித்தார்.

இந்த செய்தி வைரலான பிறகு ரஹ்மான் விவாகரத்துக்கு அந்த பெண் தான் காரணமா என இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அந்த பெண்ணுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என சாயிராவின் வக்கீல் விளக்கம் கொடுத்தார்.

மகன் பதிலடி

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இன்ஸ்டாக்ராமில் இந்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

"என் அப்பா ஒரு legend. அவர் இசையமைப்பிற்காக மட்டும் அல்ல, அவர் பல வருடங்களாக சேர்ந்து வைத்த மரியாதை, மதிப்பு மற்றும் அன்பு தான் காரணம். அவரை பற்றி பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் புறப்படுவதை பார்க்கும்போது மனமுடைந்து போனேன். இப்படி பொய் தகவல்களை பரப்பாதீங்க" என ஏ.ஆர்.அமீன் கேட்டுக்கொண்டிருக்கிறார். 

Comments