Offline

LATEST NEWS

மீண்டும் இணையும் ராம் – ஜானு : 96 Part 2 புது அப்டேட்
Published on 11/29/2024 02:13
Entertainment

கடந்த 2018-ம் ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி- திரிஷா நடிப்பில் வெளியான படம் ’96’. பள்ளிப் பருவ காதலர்கள் 20 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதை மிகவும் யதார்த்தமாக காட்டிய படம் ’96’. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

’96’ படத்துக்குப் பின் இயக்குனர் பிரேம் குமார் ‘மெய்யழகன்’ படத்தை இயக்கினார். இப்படமும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.இந்த நிலையில், ’96’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளும் முடிவடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி- திரிஷா நடிக்க உள்ள 96 இரண்டாம் பாகத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், விஜய் வசந்தா இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

Comments