Offline

LATEST NEWS

பெங்களூரு: ஓட்டலில் காதலியை குத்தி கொன்றுவிட்டு சடலத்துடன் நாள் முழுவதும் தங்கியிருந்த காதலன்
Published on 11/29/2024 02:16
News

பெங்களூரு,அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாயா கோகாய் என்ற இளம்பெண், கடந்த 23-ந்தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திராநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தனது காதலன் ஆரவ் ஹர்னி என்பவருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். கடந்த 2 நாட்களாக அவர்கள் இருவரும் வெளியே வராத நிலையில், இன்று ஆரவ் ஹர்னி மட்டும் அறையில் இருந்து வெளியேறி சென்றுள்ளார்.

அவர் சென்ற பிறகு அறைக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் அங்கிருந்த ஊழியர்கள் சந்தேகமடைந்து அறையை திறந்து பார்த்தபோது, இளம்பெண் மாயா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், மாயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், மாயா கோகாய் நேற்றைய தினமே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்ததில், கடந்த 2 நாட்களாக அறையில் இருந்து யாரும் வெளியே செல்லவோ, அல்லது அறைக்கு உள்ளே வரவோ இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஆரவ் ஹர்னி தனது காதலி மாயாவை நேற்று கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, நாள் முழுவதும் சடலத்துடன் தங்கியிருந்துள்ளார். இதனால் கொலையை செய்துவிட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி வேறு இடத்தில் போடுவதற்கு ஆரவ் திட்டமிட்டிருந்தாரா? என போலீஸார் சந்தேகிக்கின்றனர். தற்போது தலைமறைவாகியுள்ள ஆரவ் ஹர்னியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comments