Offline
Menu
கஜகஸ்தானில் வெடித்து சிதறிய பயணிகள் விமானம் ; 42 பேர் பலி- 28 பேர் காயம்
Published on 12/26/2024 01:56
News

கஜகஸ்தானில் அக்டாவ் பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில், 42 பேர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அஜர்பைஜானின் பாகுவில் இருந்து ரஷ்யாவுக்கு 62 பேரை ஏற்றிக்கொண்டு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. கஜகஸ்தானில் அக்டாவ் பகுதியில் பரந்திகொண்டிருந்தபோது விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது.

விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு பலமுறை வானில் வட்டம் அடித்தது. விமானி நீண்ட நேரம் முயற்சி செய்தும் விபத்தை தவிர்க்க முடியவில்லை.

பயணிகள்,, விமான சிப்பந்திகள் என மொத்தம் 67 பேருடன் சென்ற விமானம், கீழே விழுந்து தீப்பற்றி எரியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் குழந்தைகள் உள்ளிட்ட 28 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

 

Comments