கோலாலம்பூர்:
சீனாவின் ஜியானில் இருந்து சிங்கப்பூர் வந்த DR135 விமானத்தில் இரு பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்கூட் அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளது.
Reddit பகிரப்பட்ட குறித்த சம்பவத்தின் வீடியோ, விமானம் தரையிறங்கும்போது இருவர் இடையே ஏற்பட்ட தகறாரைக் காட்டியது. அந்த வீடியோவில், ஒரு நபர் தனது சாமான்களை எடுக்க விடாமல் மற்றொரு நபரை நிறுத்துவதைக் காணலாம். பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
அதனைத் தொடர்ந்து விமானப்பணியாளர் குழுவினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சிங்கப்பூரின் மாண்டரின் மொழி சேனல் 8 க்கு அளித்த அறிக்கையில், ஸ்கூட் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியது.
“சாங்கி விமான நிலையத்தில் இறங்கும் போது, இரண்டு பயணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக எங்கள் குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டு, பாதுகாப்பு நெறிமுறைகளின்படி நிலைமையை கட்டுப்படுத்த தலையிட்டனர்.
இந்த சம்பவத்தால் ஏனைய பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு எந்தக்குறையும் இல்லை என்று ஸ்கூட் மீண்டும் உறுதிப்படுத்தியது.