கோலாலம்பூர்:
இன்று முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை நாட்டிலுள்ள ஆறு மாநிலங்களுக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வானிலையால் மலாக்கா, ஜோகூர், திரெங்கானுவின் உலு திரெங்கானு, மாராங், டுங்கூன், கெமாமான் ஆகிய இடங்கள் பாதிக்கப்படும் என்று அது கணித்துள்ளது.
மேலும் பகாங்கின் ஜெரான்டுட், மாரான், குவாந்தான், பேரா, பெக்கான், ரோம்பின் ஆகிய பகுதிகளிழும் இந்த தொடர் கனமழையால் பாதிக்கப்படும் என்றும், நெகிரி செம்பிலானில் கோலப் பிலா, ஜெம்போல், தம்பின் ஆகிய வட்டாரங்களிலும் இந்த கனமழை பெய்யும் என்று அது இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது .
இவைதவிர சரவாக்கில் கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெடோங், சரிகேய், சிபு, மூக்கா, கபிட் (சாங், கபிட்) பிந்துலு ஆகிய இடங்களிலும் இந்த தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.