Offline
Menu
மலேசியா- ஜப்பான் இடையே கல்வித் துறையை மேம்படுத்த இணக்கம்- பிரதமர்
Published on 01/11/2025 05:22
News

கோலாலம்பூர்:

இரு நாட்கள் உத்தியோகப் பூர்வ பயணமாக இன்று மலேசியா வந்தடைந்த ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் இன்று (ஜனவரி 10) புத்ராஜெயாவில் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது பல்வேறு கல்வித் திட்டங்கள் குறித்து அவர்கள் கலந்துபேசினர்.

குறிப்பாக ஜப்பானின் சுகுபா பல்கலைக்கழகக் கிளையை மலேசியாவில் அமைப்பது தொடர்பிலும், மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மலாக்கா (UTeM), வாசெடா பல்கலைக்கழகம், மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (UTM), ஜப்பான் அனைத்துலகத் தொழில்நுட்பக் கழகம் (JIIT) போன்றவற்றுக்கு இடையிலான பங்காளித்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஜப்பானின் கீயோ பல்கலைக்கழகம் உலகில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது என்று கூறிய பிரதமர், அந்தப் பல்கலைக்கழகம் தமது கல்வித் திட்டங்கள் சிலவற்றில் பங்குபெறுவதை உறுதிசெய்யும்படி ஜப்பானியப் பிரதமரிடம் தாம் கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார்.

இந்தக் கல்வித் திட்டங்கள், மலேசியா-ஜப்பான் உறவுகளை வலுப்படுத்தும் பெரிய அளவிலான முயற்சியில் ஓர் அங்கம் என்றார் அவர்.

மேலும் வர்த்தகம், முதலீடு, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத எரிசக்தி ஆகியவை தொடர்பான ஒத்துழைப்பு மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

Comments