பெட்ரா பிராங்கா அருகே மூழ்கிய மலேசிய கப்பல்: 18 ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்பு!"
சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) தெரிவித்தபடி, ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை, பெட்ரா பிராங்காவுக்கு அருகே, சிங்கப்பூர் கடல் பகுதியில், மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட "சில்வர் சின்சியர்" கப்பல் மூழ்கி விட்டது.
கப்பலிலிருந்த 18 ஊழியர்களும் அனைத்து நடவடிக்கைகளுக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீரானதாகவும், அவர்கள் இந்தோனீசியாவின் பாத்து அம்பாரில் இறக்கிவிடப்படுவதாக MPA தெரிவித்துள்ளது.