2024 செப்டம்பர் நிலவரப்படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.60.53 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது, இது 2024 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.3% உயர்வை காணப்பட்டுள்ளது.
இந்த வெளிநாட்டு கடனின் விகிதம், ஜூன் மாதத்தில் 18.8% இருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் 19.4% ஆக உயர்ந்துள்ளது. மத்திய நிதி அமைச்சின் தரவுகளின்படி, அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளின் வெளிநாட்டுக் கடனும் செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியா மேலும் பல மேம்பாட்டுத் திட்டங்களுக்காக கடன் பெற்று வருகின்றது. கடந்த வாரம், ஆசிய வளர்ச்சி வங்கி பசுமை மற்றும் நீடித்த உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு 4,250 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்தது.