Magic mushroom” என மின்சிகரெட்டில் பயன்படுத்தப்படும் திரவம் உண்மையில் செயற்கை கஞ்சா என்று தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பின் (Nada) தலைவர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 50 மாதிரிகளில் நடந்த பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த விஷயம் கண்டறியப்பட்டுள்ளது. "Magic mushroom" என்ற வார்த்தை இளைஞர்களை தவறாக வழிநடத்தி, செயற்கை கஞ்சா இளைஞர்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கியுள்ளது என்று அவர் கவலை தெரிவித்தார்.
போதைப்பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றும், செயற்கை போதைப்பொருட்களின் பயன்பாடு விரைவாக பரவுவதாகவும் அவர் கூறினார்.