Offline
பயங்கரமா இருக்கே நெல்சா! ஜெயிலர் 2 அறிவிப்பு
Published on 01/16/2025 04:43
Entertainment

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் (2023) படம் பெரிய வெற்றியுடன் 600 கோடி வசூல் செய்து, ரஜினிகாந்த் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தின் இசை, குறிப்பாக "காவாலா" பாடல் மற்றும் ரஜினிகாந்தின் ஆக்ஷன் காட்சிகள் பாராட்டப்பட்டது. அதன் பின், ஜெயிலர் 2 படத்துக்கான பேச்சுகள் எழுந்து, தற்போது நெல்சன் - அனிருத் - ரஜினிகாந்த் கூட்டணி மீண்டும் இணையும் என தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பு வீடியோ தற்போது வெளியிடப்பட்டது.

Comments