Offline
Menu
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து
Published on 01/17/2025 16:02
News

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு கொள்ளையன் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சைஃப் அலி கான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் சயிஃப் அலி கான் தனது மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்தவர்கள் விழித்தெழுந்ததையடுத்து, கொள்ளையன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.

பாந்த்ரா போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் குற்றவாளியை பிடிக்க தனிப்படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சயிஃப் அலிகான் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், பாலிவுட்டை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கத்திக்குத்து காரணமாக அவருக்கு ஆறு காயங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு ஆழமானவை. காயங்களில் ஒன்று அவரது முதுகெலும்புக்கு அருகில் உள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வருகிறோம் என்றும், அறுவைசிகிச்சைக்குப் பிறகுதான் பாதிப்பு எவ்வளவு என்பது தெரியவரும்” என்றும் லீலாவதி மருத்துவமனையின் சிஓஓ டாக்டர் நிரஜ் உத்தாமணி கூறினார்.

Comments