Offline
26-வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
News
Published on 01/17/2025

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள திருப்புனித்துறையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சிறுவன் மிஹிர் (வயது16). இவன் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 26-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதில் படுகாயமடைந்த அவன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தான்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்புனித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments