Offline
கோலாலம்பூரில் பார்க்கிங் கட்டணம் வருமானத்தின் பெரும் பகுதியை விழுங்குகிறது
News
Published on 01/29/2025

கோலாலம்பூர்

மிகவும் பரபரப்பான நெரிசல் மிக்க வாகனங்கள் மத்தியில் கோலாலம்பூரின் மையப் பகுதியில் வாகனத்தை ஒட்டிச்செல்வது என்பது மிகப்பெரிய ஒரு சவாலாக இருப்பதை மறுக்க முடியாது. இந்தத் துன்பத்தை அனுபவிப்பவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க மாநகரின் மையப் பகுதியில் கார்களை நிறுத்தி வைப்பதற்கான பார்க்கிங் கட்டணம் ஒருவரின் வருமானத்தின் பெரும் பகுதியை விழுங்குவதாக உள்ளது. கோலாலம்பூரில் மட்டும் பார்க்கிங் கட்டணம் ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்று முட்டி மோதிக்கொண்டு யோசிக்கும் வாகனமோட்டிகள் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவைகளை வழங்கும் பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்து வது பற்றி ஏன் யோசிப்பதில்லை.

அலைச்சல் இல்லாத சௌகரியமான பயணங்களை வழங்கும் பொதுச்சேவைகள் நிறைவாக இருந்தாலும் அதனைப் பயன்படுத்துவதை இவர்கள் கௌரவக் குறைச்சலாகக் கருதுகின்றனரா என்ற கேள்வியும் எழுகிறது. கடுமையான வாகனப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாவதைவிட இந்தப் பொதுப்போக்குவரத்து மனநிம்மதியைத் தருகிறது என்பதை இவர்கள் ஏன் யோசிப்பதில்லை.

கோலாலம்பூரின் பல பகுதிகளில் பார்க்கிங் கட்டணங்கள் பலவிதமாக உள்ளன. ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விதமான கட்டணம். இவற்றை அலசுவோம்.

சூரியா கேஎல்சிசி: திங்கள் முதல் வெள்ளி வரை. முதல் ஒரு மணி நேரத்திற்கு 5 ரிங்கிட் தொடர்ந்து அடுத்தடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தலா 4 ரிங்கிட். மாலை’ 5.00 மணியிலிருந்து விடியற்காலை 5.00 மணி வரை அதிகப்பட்ச சுட்டணம் 17 ரிங்கிட், வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை தினத்திலும் முதல் மூன்று மணி நேரத்திற்கு 5 ரிங்கிட். அடுத்தடுத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தலா 4 ரிங்கிட், நள்ளிரவைக் கடந்தால் கூடுதலாக 12 ரிங்கிட் பார்க்கிங் டிக்கெட்டைக் காணாமல் செய்தால் 100 ரிங்கிட் அபராதம்.

Comments