Offline
அமெரிக்காவில் சூறாவளி தாக்கம்; 9 பேர் பலி
Published on 02/20/2025 10:45
News

கென்டகி மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் ஏற்பட்ட சக்திவாய்ந்த குளிர்கால சூறாவளி தாக்குதலில் 9 பேர் பலியாகி உள்ளனர். கென்டகி கவர்னர் ஆண்டி பெஷீர், கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, மீதமுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்துள்ளதாக கூறினார். சூறாவளி தாக்குதல் காரணமாக, டென்னஸ்ஸி, கென்டகி மற்றும் விர்ஜீனியா மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள், வீடுகள் வெள்ள நீரில் மூழ்கி காணப்படுகின்றன. கென்டகி மாகாணத்தில் நீர் மட்டம் அதிகரித்து, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Comments