சிரம்பானில் உள்ள நீலாய் 3 வணிக மையத்தில் உள்ள ஒரு கார்பெட் தொழிற்சாலை இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலுமாக எரிந்து நாசமானது. காலை 7.49 மணிக்கு இந்த சம்பவம் குறித்து அவசர அழைப்பு வந்ததை அடுத்து, தனது குழு உடனடியாக செயல்பட்டதாக நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூத்த செயல்பாட்டுத் தளபதி II கிர் அமீர் அகமது தெரிவித்தார்.
அதிர்ஷ்டவசமாக, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், கம்பளப் பொருட்கள் என்பதால் தீ அணைப்பதை கடினமாக்கியது. மேலும் சிறிது கால அவகாசம் ஆனது. தீ பரவலைக் கட்டுப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். மேலும் தகவல்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார். இந்த நடவடிக்கையில் 29 தீயணைப்பு வீரர்கள், பல தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.