தாமான் செத்தியா டிரோபிகா ஜோகூர் பாருவில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில் தீப்பற்றி எரிந்த காருக்குள் கிடந்த ஓட்டுநரின் அடையாளம் உறுதி செய்யப்படவில்லை என்று கோத்தா திங்கி தீயணைப்புத் துறை அதிகாரி முகமட் யாசிட் அப்துல் ரஹ்மான் கூறினார்.
காலை 4.58 மணிக்கு இந்த விபத்து நேர்ந்திருக்கிறது. தீப்பற்றிய காரில் அதன் ஓட்டுநர் கருகி உயிரிழந்தார். அவர் யார் என்பது இன்னும் உறுதியாக தெரிய வில்லை. கட்டுப்பாட்டை இழந்த ஹோண்டா சிட்டி கார் சாலைத் தடுப்பை மோதியிருக்கிறது.