Offline
Menu
சீனாவில் AI தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோ, மக்களை தாக்க முயன்ற அதிர்ச்சி வீடியோ!
Published on 02/26/2025 11:18
News

சீனாவில் மக்கள் கூடியிருந்த நிகழ்வு ஒன்றில் செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) கட்டுப்படுத்தப்படும் ரோபோ தாக்குதல் நடந்த முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், நிகழ்ச்சியில் மனித உருவ ரோபோ அங்கு கூடியிருந்தவர்களில் சிலரை நோக்கி முன்னேறி தாக்க முயற்சிக்கிறது.

மென்பொருள் கோளாறால் ரோபோ அவர்களை நோக்கி முன்னேறிச் சென்று அவர்களில் சிலரைத் தாக்க முயற்சிப்பதை வீடியோ காட்டுகிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

இருப்பினும் சிந்திக்கும் திறனுடைய ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்குவருங்காலங்களில் அச்சுறுத்தலாக அமையும் என்ற பரவலான கூற்றை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Comments