Offline
வாட்ஸ்-அப் மூலம் மனைவிக்கு ‘முத்தலாக்’ கூறிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு
Published on 03/05/2025 12:14
News

திருவனந்தபுரம்: கேரளா, காசர் கோடு மாவட்டம் நெல்லிக் கட்டை பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் (26) தனது மனைவி நுசைபாவிற்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் “முத்தலாக்” கூறி, 3 முறை குரல் பதிவு அனுப்பியுள்ளார். இதையடுத்து நுசைபா, காசர்கோடு ஹோஸ்துர்க் போலீசில் புகார் அளித்தார்.

அப்துல் ரசாக் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து, திருமணத்திற்கு பிறகு மீண்டும் அங்கு சென்றிருந்தார். 'முத்தலாக்' தடைச்சட்டம் அமலுக்கு வந்தபிறகு இது கேரளாவில் பதிவான முதல் குற்றச்சாட்டாகும்.

அப்துல் ரசாக், அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments