மார்ச் 3ஆம் தேதி வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்பு, மெக்சிகோ மற்றும் கனடாவுக்கு 25% வரி விதிப்பதை உறுதிப்படுத்தினார்.
செவ்வாய்க் கிழமையிலிருந்து (மார்ச் 4) இந்த வரி அமலுக்கு வரும். "இரு நாடுகளுக்கும் வரி விதிப்பு நிச்சயம். அமெரிக்காவில் கார்களையும் இதரவற்றையும் உற்பத்தி செய்தால் அவர்களுக்கு வரி இருக்காது," என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவுக்கு சட்டவிரோதப் போதைப் பொருள் நுழைவதை கட்டுப்படுத்தும் வரை வரி தவிர்க்க முடியாது என அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு முன்பு 10% இருந்த வரி, தற்போது 20% ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் வரி உயர்வு காரணமாக, சீனா பதிலாக அமெரிக்க பொருள்களுக்கு வரி விதித்துள்ளது. இதனால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய இயந்திரங்கள், கார்கள், சரக்கு வாகனங்கள், நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் விவசாய இயந்திரங்கள் பாதிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.