Offline
அமைச்சரவை கூட்டத்தில் எலான் மஸ்க்-வெளியுறவுத்துறை மந்திரி கடும் வாக்குவாதம்
Published on 03/09/2025 12:26
News

வாஷிங்டன்,அமெரிக்காவில் அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் அதிபர் டிரம்ப் மற்றும் அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் டிரம்ப் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்கள் நீக்கம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ, எலான் மஸ்க் இடையே கடும் வார்த்தை மோதல் எற்பட்டது.

 

ரூபியோ பெரிய அளவில் பணி நீக்கங்களை செய்யவில்லை என்று எலான் மஸ்க் கூறினார். இதற்கு ரூபியோ எதிர்ப்பு தெரிவித்து பேசினார். பின்னர் டிரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, ரூபியோ-எலான் மஸ்க் மோதல் இல்லை. அவர்கள் இருவரும் ஒரு அற்புதமான வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றார்.

Comments