Offline

LATEST NEWS

தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சினிமா டான்சர் தற்கொலை முயற்சி
By Administrator
Published on 03/21/2025 18:25
Entertainment

சென்னை ,சென்னை வடபழனியில் சினிமா டான்சராக இருக்கும் பத்மா என்பவர், பண மோசடியால் மனமுடைந்து தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். கணவரைப் பிரிந்து வாழும் பத்மாவிடம், அறிவழகன் என்பவர் பழகி தொழில் தொடங்குவதற்காக 70 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 80 சவரன் நகை வாங்கியுள்ளார்.

பணம் மற்றும் நகையை அவர் திரும்பித் தராததால் மனமுடைந்த பத்மா, தற்கொலைக்கு முயன்ற நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments