2025ஆம் ஆண்டிற்கான பணி ஓய்வுபெறும் சிறந்த நாடுகளின் பட்டியலில் மலேசியா 7-ஆவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் மலேசியா மற்றும் தாய்லாந்து மட்டுமே தென் கிழக்கு ஆசியாவிலிருந்து முதல் 10 இடங்களில் உள்ளன. மலேசியாவில் வாழ்க்கை செலவுகள் குறைவாகவும், சுகாதாரம் சிறப்பாகவும் உள்ளது. "Malaysia My Second Home" திட்டம் போன்ற நீண்டகால விசா விருப்பங்கள் ஓய்வுபெற்ற வெளிநாட்டவர்களுக்கு மலேசியாவில் வசிக்க சிறந்த வாய்ப்பாக கூறப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் உணவகங்களில் உணவின் விலை குறைவாக உள்ளது. பனாமா முதல் இடத்தில், போர்த்துகல் இரண்டாம், கோஸ்டாரிக்கா மூன்றாம் இடத்தில் உள்ளன.