அல்பைன் ஃபார்முலா 1 அணி பெரும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. எதிர்கால முடிவுகளுக்கான மதிப்பீட்டின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய வீரர் ஜாக் டூஹனை அடுத்த 5 போட்டிகளுக்கு விலக்கியது. அவரது இடத்தில் அர்ஜென்டினாவின் பிராங்கோ கொலப்பின்டோ போட்டியிட உள்ளார். டூஹனின் செயல்திறன் குறைவாக இருந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் பாதுகாப்பு சாரதி பங்கிற்கு மாற்றப்படுகிறார். அதே நேரத்தில், அணித் தலைவர் ஒலிவர் ஓக்ஸ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். அல்பைன் தற்போது 2025 உலகக் கோப்பை புள்ளியட்டத்தில் 9வது இடத்தில் உள்ளது.