கோலாலம்பூர்:
நேற்று மதியம் பங்சாரில் உள்ள ஜாலான் பெனாகாவில் மரம் விழுந்ததில் ஒரு பெரோடுவா மைவி மற்றும் ஒரு மிட்சுபிஷி ட்றைடன் கார்கள் சேதமடைந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு பிற்பகல் 3.03 மணிக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் செயல்பாட்டுத் தளபதி பிபிகே ஐ ராம்லி முகமட் உறுதிப்படுத்தினார்.
கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் (DBKL) உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றும் பணிகள் நடத்தப்பட்டன என்றார் அவர்.