ஈப்போ, பல்நோக்கு வாகனம் (MPV) கட்டுப்பாட்டை இழந்து நேற்று இரவு 9.10 மணியளவில், சித்தியாவானில் உள்ள ஒரு துரித உணவு உணவகத்தில் மோதியதில் ஒரு வயதான மாது காயமடைந்தார். பேராக் தீயணைப்பு மீட்புத் துறை (JBPM) உதவி செயல்பாட்டு இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது, 70 வயதுடைய பாதிக்கப்பட்டவர், வாகனத்தின் கீழ் சிக்கியதாகவும், ஆனால் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களால் மீட்கப்பட்டதாகவும் கூறினார்.
செயல்பாட்டுத் தளபதி நிலைமையை மதிப்பிட்டு, பாதிக்கப்பட்டவரை மேலும் நடவடிக்கைக்காக ஒப்படைப்பதற்கு முன்பு முதலுதவி வழங்குவதில் சுகாதார அமைச்சக ஊழியர்களுக்கு உதவுமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இரவு 9.30 மணிக்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இரவு 9.49 மணிக்கு நடவடிக்கை முடிந்தது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. ஒரு வெள்ளை MPV, திசை மாறி சித்தியாவானில் உள்ள ஒரு துரித உணவு உணவகத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது.