'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தில் சசிகுமாரின் மகனாக நடித்த குழந்தை நட்சத்திரம் கமலேஷ் ஜெகன், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தன்னுடைய பள்ளிப் படிப்புக்கான கட்டணத்தை ஏற்றுக் கொண்டதாக பகிர்ந்துள்ளார்.
'காத்துவாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு முடிவில், இருவரும் தனியாக அழைத்து கல்விக்கான செலவை மேற்கொள்கிறோம் என கூறியதை அவர் ஒரு சமீபத்திய பேட்டியில் நெகிழ்ந்து தெரிவித்தார்.