Offline
விஜய் மகன் சஞ்சய் படத்தின் பட்ஜெட் ரூ.25 கோடி!.. முழு விவரம் இதோ
By Administrator
Published on 05/11/2025 09:00
Entertainment

விஜய்யின் மகன் சஞ்சய், வெளிநாட்டில் சினிமா படிப்பு முடித்துவிட்டு, தனது முதல் திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் மூலம் இயக்கி வருகிறார்.

நீண்ட நாட்களாக முன் தயாரிப்பு நடைபெற்ற இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். அவருடைய பிறந்தநாளன்று வெளியான கிலிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் பட்ஜெட் ரூ. 25 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜேசன் சஞ்சய் ஜோசப் மீடியா என்டர்டெயின்மெண்ட்ஸ்’ என்ற நிறுவனத்தின் மூலம் சஞ்சய் இந்தப் படத்தை தயாரிக்கும் பணி மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தின் மூலம் இயக்குநராக மட்டும் அல்லாது, தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் சஞ்சய்.

Comments