Offline
9 நாளில் ரூ.91 கோடி வசூல் செய்த ரெட்ரோ – உலகளவில் படை போடும் சூர்யா படம்!
By Administrator
Published on 05/11/2025 09:00
Entertainment

கங்குவா பட தோல்விக்குப் பின், சூர்யாவின் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘ரெட்ரோ’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்க, பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தில், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

சந்தோஷ் நாராயணனின் இசையுடன் காதல் மற்றும் ஆக்ஷன் கலவையில் உருவான இப்படம், விமர்சனங்களில் கலவையான வரவேற்பை பெற்றிருந்தாலும், ஆரம்ப நாள்களில் வசூலில் தாக்கம் காட்டியது.

இப்போது, ரெட்ரோ உலகளவில் வெளியான 9 நாட்களில் ரூ.91 கோடி வரை வசூல் செய்துள்ள தகவல் வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments