Offline
நடிகர் ரவிமோகன் விவகாரம்… ஆர்த்தி ரவிக்கு திரையுலக பிரபலங்கள் ஆதரவு
By Administrator
Published on 05/12/2025 09:00
Entertainment

நடிகர் ரவிமோகன் 2009ல் ஆர்த்தியை மணந்தார். இரு மகன்கள் உள்ளனர். 2024 செப்டம்பரில் பிரிவதாக அறிவித்தார். விவாகரத்து வழக்கு நடக்கிறது. சமீபத்தில் ரவிமோகன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு பாடகி கெனிஷாவுடன் சென்றார். இதைத்தொடர்ந்து ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டார். அதில், ரவிமோகன் பிரிந்தது மட்டுமல்லாமல், பொறுப்புகளையும் துறந்துவிட்டதாகவும், வங்கியின் அறிவிப்பால் வீட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாகவும் கூறினார். மேலும், தன்னை 'முன்னாள் மனைவி' என ஊடகங்கள் அழைக்க வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்தார். நடிகைகள் குஷ்பு, ராதிகா, கீர்த்தி சுரேஷ், திரிஷா, பிரியா ஆனந்த் மற்றும் நடிகர்கள் வைபவ், ரகுமான் ஆகியோர் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்

Comments