சிவசங்கரி, ஈய்ன் யோவ் ஆகியோர் சிகாகோவில் நடைபெறும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர். சிவசங்கரி சனா இப்ராஹிமையும், ஈய்ன் யோவ் முஹம்மது ஆசிம் கானையும் வென்றனர். அடுத்ததாக சிவசங்கரி அமண்டா சோபியையும், ஈய்ன் யோவ் முஸ்தபா அசலையும் சந்திக்கவுள்ளனர். ரச்சேல் ஆர்னால்ட், ஐரா அஸ்மான் ஆகியோர் தோல்வியடைந்தனர்.