Offline
நண்பன் ஆர்யாவுக்கு லாபம் வாங்கித்தந்தாரா சந்தானம்? டிடி நெக்ஸ்ட் லெவல் முதல் நாள் வசூல் வெளியானது!
By Administrator
Published on 05/18/2025 09:00
Entertainment

நண்பன் சந்தானத்தை வைத்து 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தை தயாரித்துள்ளார் ஆர்யா. நேற்று வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பொழுதுபோக்குக்கு ஏற்ற ஹாரர் காமெடி படம் என்ற வரவேற்பை பெற்றுள்ளது.'தில்லுக்கு துட்டு' சீரிஸை தொடர்ந்து இந்த படமும் அதே ஓட்டத்தில் வந்துள்ளது. செல்வராகவன், கௌதம் வாசுதேவ மேனன், மொட்டை ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அவர்களது நடிப்பு சிறப்பாக இருப்பதோடு, ராஜேந்திரனின் காமெடி ரசிகர்களிடம் நல்ல ரீச் பெற்றுள்ளது.முதல் நாளிலேயே ரசிகர்கள் உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாட, படம் ₹2.85 கோடி வசூலை ஈட்டியுள்ளது. வார இறுதியும், கோடை விடுமுறையும் காரணமாக வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேநேரம் சூரியின் 'மாமன்' படமும் ஒரே நாளில் வெளியாகி உள்ள நிலையில், யார் வசூல் கிங் என்பது சீக்கிரமே தெரிய வரும்.

Comments