டோட்டன்ஹாமில் 10 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக ஒரு கோப்பையை வென்றதும், தென் கொரியாவின் ஸ்பர்ஸ் கேப்டன் சொன் ஹியுங்க்மின், “நான் இந்த உலகத்தில் மிக மகிழ்ச்சியான மனிதன்!” எனத் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த ஒரே ஸ்பர்ஸ் வீரராக, 32 வயதான சொன் இந்த ஐரோப்பிய இறுதிப்போட்டியில் மீண்டும் பங்கேற்றார். பல ஆண்டுகளாக நெருக்கமான தோல்விகளை சந்தித்த பின்னர், இந்த வெற்றி அவருக்குப் பெரும் வெளிச்சமாக அமைந்தது.“இந்த போட்டியை கடந்த 7 நாட்களாக தினமும் கனவில் பார்த்தேன். வெற்றி கிடைத்தது என் கனவுக்கு நிஜம் ஆனது போல உள்ளது,” என்று TNT Sports-இற்கு பேசிய அவர், “இது கொண்டாடும் நாள். ஆனா, வீட்டுக்கு திரும்பும் பிளைட்டையே தவறவிட்டுவிடலாம்!” என சிரித்தார்.பிரீமியர் லீக்கில் 17வது இடத்தில் இருந்தாலும், இந்த வெற்றியால் டோட்டன்ஹாம் அடுத்த சீசனில் சாம்பியன்ஸ் லீக்கில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.கொரிய ரசிகர்களின் ஆதரவுக்கும் சொன் நன்றி தெரிவித்தார்: “நான் ஒரு கொரியராக இருப்பதில் பெருமை படுகிறேன். காலை 4 மணிக்கு கூட என்னை ஆதரித்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி!”