ஐரோப்பாவில் ஐந்து மாதங்கள் விளையாடிய பின், மலேசிய மகளிர் தேசிய அணியின் கோல்கீப்பர் நூர் அசுரின் மாஸ்லான், புதுமுக உற்சாகத்துடன் நாடு திரும்பியுள்ளார். அல்பேனியாவின் KFF Vllaznia அணிக்காக விளையாடி லீக் வெற்றியில் பங்கு பெற்ற அசுரின், இந்த அனுபவம் தன்னை சிறந்த வீரராகவும், நபராகவும் மாற்றியுள்ளதாக கூறினார்.அல்பேனிய அனுபவம் புதிய சவால்களையும் கற்றல்களையும் கொடுத்தது. இப்போது அந்த அறிவை தேசிய அணிக்குப் பகிர விரும்புகிறேன்,” என தெரிவித்துள்ளார்.புதிய பிரேசிலிய பயிற்சியாளர் ஜோயல் கார்னெல்லியின் கீழ் மலேசிய அணியின் பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. அடுத்ததாக பூட்டான், ஹாங்காங்குடன் நட்புறவு ஆட்டங்கள் மற்றும் ஜூன் 23 முதல் ஜூலை 5 வரை தஜிகிஸ்தானில் நடைபெறும் 2026 ஏஎஃப்சி மகளிர் ஆசியக் கோப்பை தகுதிச்சுற்றில் பங்கேற்க உள்ளனர்.