அமெரிக்காவில் தயாரிக்கப்படாவிட்டால், ஆப்பிள் மற்றும் மற்ற ஸ்மார்ட்போன்கள் மீது 25% வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.முதலில் ஆப்பிள் மட்டும் குறிவைக்கப்பட்ட போதும், பின்னர் சாம்சங் உள்ளிட்ட அனைத்து உற்பத்தியாளர்களும் சேர்க்கப்பட்டனர்.ஆப்பிள் ஐபோன்களை அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என டிமுக் கூக்கிடம் டிரம்ப் நேரில் கேட்டுள்ளார். இந்தியாவில் உற்பத்தி செய்தாலும் அது போதாது எனவும் தெரிவித்தார்.அனைத்துப் போன்களின் விலை உயரும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது ஆப்பிள் ஷேர்கள் 3% சரிவை சந்தித்துள்ளன.சீனாவுடன் அமெரிக்கா 90 நாள் வரி ஒத்திவைப்பை அறிவித்துள்ளது. ஆனால், ஆப்பிள் மீதான அழுத்தம் தொடரும் என தெரிகிறது.