பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததை அடுத்து, பாகிஸ்தானுடன் இருதரப்பு உறவுகளை இந்தியா நிறுத்தியுள்ளது. முக்கியமாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக பாய முடியாது” என மோடி அரசு வலியுறுத்தியுள்ள நிலையில், பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முழுமையாக கைவிடும் வரை ஒப்பந்தம் செயல்படாது என மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், எந்தவொரு பேச்சுவார்த்தையும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்ததாக மட்டுமே அமையும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.