அமெரிக்க நீதிமன்றம், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் உரிமையை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்ய முயற்சித்ததை தற்காலிகமாக தடை செய்துள்ளது.ஹார்வார்டு இது அமெரிக்க அரசியலமைப்பை மீறுவதாகவும், பல ஆயிரம் மாணவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தது.நீதிபதி அலிசன் பெரோக்ஸ் இந்த தடை உத்தரவை வழங்கினார்.டிரம்ப் அரசு, ஹார்வார்டு மற்றும் பல நிறுவனங்களை தனது அரசியல் கொள்கைகளுக்கு அமைவதற்கு அழுத்தி வருகிறது.ஹார்வார்டு இதற்கு எதிராக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.