சுபாங் ஜாயா,புச்சோங் இந்தான் பகுதியில் இன்று அதிகாலை, 47 வயதான ஒரு நபர், தனது காதலியின் முன்னாள் கணவரும், இருவர் தோழர்களும் சேர்ந்து அரிவாளும் இரும்புக் கம்பியும் கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. பொறாமை மற்றும் குடும்பத் தகராறே காரணமாக சந்தேகிக்கப்படுகிறது.பாதிக்கப்பட்டவர் தற்போது சுல்தான் இத்ரீஸ் ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மூன்று சந்தேகப்படுவோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களை பிடிக்க போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.இந்த சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 326வது பிரிவின் கீழ் விசாரணை நடக்கிறது.