மருத்துவ அமைச்சின் ஒப்புதலின்றி விற்கப்படும் பதிவற்ற வெய்ப் தயாரிப்புகளே உண்மையான பிரச்சனை என மலேசிய வெய்ப் விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.
MRECA தலைவர் அஸ்வான் மனாஸ், அனுமதியுடன் விற்கப்படும் வெய்ப்புகளில் போதைப்பொருட்கள் இல்லை என்றும், மாநில அரசுகளின் தடைகள் பிளாக் மார்க்கெட் தயாரிப்புகளை அதிகரிக்கச் செய்யும் என்றும் எச்சரித்தார்.
வெய்ப் தயாரிப்புகள் மீதான முழுத் தடை தவறானது என்றும், கல்வி, கண்காணிப்பு மற்றும் ஒத்துழைப்பு மூலமே பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.