காசாவில் பணியாற்றும் பிரிட்டன் அறுவைச் சிகிச்சை மருத்துவர் விக்டோரியா ரோஸ், “எனது வாழ்க்கையில் இவ்வளவு வெடிகாயங்கள் நான் பார்த்ததே இல்லை” எனக் கூறினார்.நாசர் மருத்துவமனையில் சிறுவர்கள் மிகக் கடுமையான தீக்காயங்களுடன் அனுமதிக்கப்படுகின்றனர். “மேற்கு நாடுகளில்கூட குணமாக முடியாத அளவிலான காயங்கள் காசாவில் பரவலாக உள்ளன,” என்றும், மருத்துவ வசதிகள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.ஐ.நா. தகவலின்படி, காசாவில் 94% மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன.
திங்கட்கிழமை மட்டும் இஸ்ரேல் தாக்குதலில் 52 பேர் பலியாகினர்; இதில் 33 பேர் பள்ளியில் தஞ்சம் புகுந்தவர்கள்.