கேபாலச்சந்தரின் 'அவள் ஒரு திரைக்கதை' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் ராஜேஷ்.
நடிகர் ராஜேஷ் மறைவு
தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் என 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாது பல்வேறு சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்துள்ளார் நடிகர் ராஜேஷ்.
2024 ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் 'மெரி கிறிஸ்துமஸ்' படமே அவரின் கடைசி படமாக அமைந்துள்ளது.
75 வயதான நடிகர் ராஜேஷ், இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது.
நடிகர் ராஜேஷின் மறைவு தமிழ் திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.