Offline
சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு : தீவிரம் காட்டும் தவெக - விஜய்யின் அடுத்த மூவ் இதுதான்!
By Administrator
Published on 05/30/2025 09:00
News

நடிகர் விஜய் கடந்த ஆண்டு தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது.
அக்டோபரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் விஜய், திமுகவை அரசியல் எதிரி, பாஜகவை கொள்கை எதிரி என அறிவித்து, திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் தனது கொள்கைகள் என தெரிவித்துள்ளார்.

தவெக பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார். தற்போது, முக்கிய மாவட்டங்களில் 2-3 பேர் வீதம் நேரில் அழைத்து, சமூகம், பொருளாதார நிலை, கட்சிப் பணி, செலவுத்திறன் ஆகியவற்றை மதிப்பீடு செய்து வேட்பாளர் பட்டியல் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த பட்டியல், விஜய் தலைமையிலான உயர் மட்ட குழுவால் இறுதியாகும் என கூறப்படுகிறது.

கூட்டணி குறித்து வரும் டிசம்பரில் முடிவு எடுக்கப்படும். பாஜக, திமுக தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் என தவெக அறிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியைப் போலவே, தவெகவும் வேட்பாளர் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஜூன் 22 பிறந்த நாளுக்குப் பிறகு, விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பை நடத்தவுள்ளார்.

Comments